வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள், அதிபர்கள் கெளரவிப்பு!
Sunday, October 9th, 2016
கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 7 ஏ முதல் 9 ஏ வரையான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கானதும், சிறந்த அதிபர்களுக்குமான கெளரவிப்பு விழா நேற்று (08) காலை-09.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சிறந்த மாணவ, மாணவிகள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

Related posts:
தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு!
இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!
|
|
|


