இங்கிலாந்தில் பகல்- இரவு டெஸ்ட்!

Saturday, October 8th, 2016

இங்கிலாந்தில் முதல் முறையாக நடைபெறும் பகல்- இரவு டெஸ்ட் போட்டியை மேற்கிந்தியதீவு அணியுடன் மோதுகிறது

5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கானும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவானதை தொடர்ந்து பகல்-இரவு டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

அவுஸ்திரேலியா முதல் முறையாக பகல்- இரவு டெஸ்டை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய பகல்-இரவு டெஸ்ட் அடிலெய்ட்டில் நடந்தது. இதில் அவுஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.2-வது பகல்-இரவு டெஸ்ட் அடுத்த வாரம் நடத்தப்படுகிறது. இதில் பாகிஸ்தான்-மேற்கிந்தியதீவு அணிகள் மோதுகின்றன. 13-ம் திகதி முதல் 17-ம் திகதி வரை இந்த பகல்-இரவு டெஸ்ட் துபாயில் நடக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு (2017) ஆகஸ்ட் மாதம் 17-ம் திகதி முதல் 21-ம் திகதி வரை எட்ஜ்பஸ்டனில் பகல்-இரவு டெஸ்ட் நடக்கிறது.

இதை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்து உள்ளது.இந்த பகல்-இரவு டெஸ்டில் இங்கிலாந்து அணி மேற்கிந்தியதீவுடன் மோதுகிறது.மேற்கிந்தியதீவு அணி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் பகல்-இரவாக நடத்தப்படுகிறது.

colt-west135937429_4848129_07102016_aff



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106