புதிய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் : மகிந்தவிடம் எழுத்துமூலம் கோரிக்கை!
Saturday, October 8th, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இணையான பொருள்படும் அல்லது பெயருடன் கூடிய புதிய கட்சிகளை பதிவு செய்ய வேண்டாம் என இந்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேர்தலை ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை நேரில் சந்தித்து எழுத்து மூலம் இவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Related posts:
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜ...
டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது – அமைச்சர் பந்து...
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை - முன்னோடி வேலைத்...
|
|
|


