அதிகாரம் உள்ளதென்பதால் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய

Saturday, April 2nd, 2016
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் முடிவு செய்யப்படும் வரையில் தேர்தல் நடாத்த முடியாது என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரம் தமக்கு இருப்பதனால் நினைத்தவாறு தேர்தல் நடாத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாட்டில் தேர்தல் நடைபெற்று வந்துள்ளது. இந்த வருடத்தில் தேர்தல் நடைபெறாது போவது ஒரு குறையாகவே நான் காண்கின்றேன். இருப்பினும், எல்லை இதுதான் என தெரியாமல் தேர்தலை எவ்வாறு நடாத்துவது எனவும் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று(1) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts:

இலங்கை கிரிக்கெற் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு அர்ஜுனவிடம் அமைச்சர் நாமல் கோரிக்கை!
ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கு எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்ள புடினுடன் ஜனாதிபதி கோட்டாபய ரா...
அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றை - சுற்றறிக்கையொன்றை வெள...