மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை ஆரம்பம் – தெரீசா மே!
Sunday, October 2nd, 2016
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக கட்சி மாநாட்டில் அவருடைய முதலாவது உரையை வழங்குவதற்கு முன்னதாக அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை இரத்து செய்கின்ற திட்டங்களை தெரீசா மே பின்னர் வெளியிடுவார்.
இந்த சட்டத்தை ரத்து செய்வது பிரித்தானியா மீண்டும் இறையாண்மையும், சுதந்திரமும் கொண்ட நாடாக உருவாகின்ற முதல் நிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும், இது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முறையாக விலகுவது வரை உருவாக போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related posts:
குண்டு வெடிப்புகளுக்கு ஐ.எஸ் உரிமை கோரியது!
பிரித்தானியாவுக்கு விசா இல்லாமல் பயணமாகலாம் - விரைவில் புதிய அறிவிப்பு!
ஊழலில் சிக்கிய பிரான்ஸ்சின் முன்னாள் அதிபருக்கு சிறை!
|
|
|


