மலையக தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

Sunday, October 2nd, 2016

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவு காரணமாக தடைப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (02) காலை கூடியிருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் நீதிமன்ற உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவித்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த சில முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாரினால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டால் நகரின் அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என தெரிவித்து சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

download

Related posts:


சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக இழுத்து மூடப்பட்டது சாவகச்சேரி திருமண மண்டபம் - சாவகச்சேரி ந...
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் - ஐக...
மின்சார சபை அடைந்துளு்ள இலாபம் தொடர்பில் அமைச்சர் காஞ்சனவின் கருத்து தவறானது - முன்னாள் மின்சாரத்துற...