நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ஸ!
Thursday, June 9th, 2022
தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதன் மூலம் பொதுஜன பெரமுன கட்சியினூடாக பொருத்தமான ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் - அரச மருத்துவ ...
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!
இந்திய கடன் வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது!
|
|
|


