சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !
Tuesday, October 27th, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் குறித்த வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு அதிகாரிகள் எடுக்கும் சில முடிவுகள் மக்களுக்கு தவறான சமிக்ஞைகளை காட்டுவதாகவும் தெரிவித்’துள்ள அவர் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள பேருவாலை மற்றும் களுத்துறை பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் நடவடிக்கை குறித்தும் வைத்தியர் ஹரித அளுத்கே அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் 85 ஹெக்ரேயரில் இம்முறை உருளைக்கிழங்குச் செய்கை!
தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரிய...
வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - அமெரிக்க திறைசே...
|
|
|


