தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரியருக்கு அதிக பங்கு உள்ளது – பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்து!

Monday, February 21st, 2022

தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ்ப்படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரியருக்கு அதிக பங்கு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மாணவர், ஆசிரியர் மற்றும் போர்வீரர் நினைவிடம்’ திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்..

மேலும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்து, தொந்தரவில்லாத அமைதியான சமுதாயத்தை அரசங்கம் உருவாக்கியுள்ளது எனவும் கமால் குணரத்ன கூறியுள்ளார்.

ஆகவே பதிலுக்கு, மாணவர்கள் அனைவரும் இந்த நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கும் சேவை செய்வீர்கள் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106