இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு!
Friday, April 1st, 2016
நாட்டில் கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டு வந்த தொடர் வீழ்ச்சி நேற்று சற்று தேக்கப்பட்டுள்ளதுடன், ரூபாவின் பெறுமதியும் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
மத்திய வங்கி பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டமை, பங்குச் சந்தை வீழ்ச்சி, வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மற்றும் சொத்துக்களில் ஏற்பட்ட தளம்பல் என்பன காரணமாக கடந்த சில வாரங்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், உள்நாட்டு நுகர்வோருக்கு அதன் நன்மையைப் பெற முடியாது போயிருந்தது. அத்துடன் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி விலையும் அதிகரித்திருந்தது.
நேற்று முன்தினம் ஒரு அமெரிக்க டொலர் 150 ரூபாவின் பெறுமதிக்கு நிகராகும் வகையில் இலங்கையின் நாணய மதிப்பு தாழ்ந்திருந்தது. இது வரலாறு காணாத நாணயப் பெறுமதி வீழ்ச்சியாகும்.
இந்நிலையில் நேற்று இலங்கையின் ரூபா மதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் டொலரின் பெறுமதி 146 ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு ரூபா அளவில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106