இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து!
Friday, September 30th, 2016
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவான் 1 ஓட்டம் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பதிலாக கவுதம் கம்பீர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவானுக்கு இடம் கிடைத்தது. ஆனால் தவான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய்யும் 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா 28 ஓட்டங்களுக்கே 2 விக்கெட்டை பறிகொடுத்தது.
பின்னர் புஜாரா மற்றும் ரஹெனா ஆகியோர் நிதானமாக ஆடி அணியை ஒரு நிலைக்கு கொண்டுவர முயன்றனர். ஆனால் மற்றைய வீரர்கள் சோபிக்க தவறியமையால் இந்திய அணி தற்போது ஏழு இலக்கங்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்றுள்ளது.இப்போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால், இந்தப் போட்டியை இந்திய அணியும், ரசிகர்களும் முக்கியமானதாக பார்க்கின்றனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106