ஒக்ரோபர் மாதத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை!

Friday, September 30th, 2016

 

ஒக்ரோபர் மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருவதால் அனைவரும் தங்களது வங்கிப் பணிகள் மற்றும் பரிவர்த்தனைகளை முன்னதாக திட்டமிட்டுக் கொள்வது நலமாகும்.

2016ம் ஆண்டு அக்டோபர் மாதமானது சனிக்கிழமை தொடங்குவதால், 8ம் தேதி மாதத்தின் 2வது சனிக்கிழமையாகும். எனவே அன்று வங்கிகளுக்கு விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை 9ம் தேதி விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமையான 10ம் தேதி ஆயுதபூஜை விடுமுறையும், திங்கட்கிழமை 11ம் தேதி விஜயதசமி விடுமுறையும் வருகின்றன.

இதனை தொடர்ந்தவாறு, வரும் 12ம் தேதி புதன்கிழமை முகரம் பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. இரண்டு வார இறுதி விடுமுறைகளை தொடர்ந்து, 3 நாட்கள் அரசு விடுமுறையும் இணைவதால், ஒக். 8, 9, 10, 11, 12 என ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. எனவே, வங்கி பயன்பாட்டாளர்கள் முக்கிய பண பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி சார்ந்த பணிகளை முன்னதாவே முடித்துக் கொள்வது நலம்.

201609261513523108_banks-continuously-5-days-leave-in-october-month_SECVPF

Related posts:


பயணிகள் போக்குவரத்து வடக்கில் இன்று ஆபத்தாக மாறிவிட்டது – மோ.போ ஓய்வு நிலை உதவி ஆணையாளர்!
கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்...
அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய விரைவில் நேர்முக தேர்வு - சுகாதார அமைச்சு அற...