பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட அனுமதி!
Thursday, September 29th, 2016
பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி ஆரம்ப தினமான எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலை-09 மணி முதல் பிற்பகல்-03 மணி வரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும்என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய பரிபாலன சபை இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் வழிபாட்டுக்கான அனுமதியை இராணுவம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts:
மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்...
அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம்முதல் அமுலுக்கு வரும் - பொது நிர்வாக அமைச்சர் ...
மருத்துவர்கள் தமது சேவையை முழுமையாக நிறைவேற்ற எங்களைப் போன்றவர்கள் வைத்தியர்களுக்கு உதவுவதற்கு முன்...
|
|
|


