மகளை காப்பாற்றப் போராடிய தந்தை!
Thursday, September 29th, 2016
ஆந்திராவில் தந்தை ஒருவர் ‘பாகுபாலி’ பாணியில் தனது மகளை காப்பாற்றப் போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பங்கி சதிபாபு (30) உடல்நிலை சரியில்லாத தனது 6 மாத மகளை காப்பாற்ற பாகுபாலி பட பாணியில் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கழுத்தளவு நீரில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது குழந்தையை அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் பங்கி சதிபாபு சேர்த்திருக்கிறார். தனது உயிரையும் பொருட்படுத்தாது சதிபாபு மகளை தூக்கிக் கொண்டு சென்றதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜிம்பாப்வேயில் ஒக்டோபரில் அமெரிக்க டாலருக்கு இணையான பாண்ட் நோட்டுகள் அறிமுகம்!
பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாம் - இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை!
பிரித்தானியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!
|
|
|


