காக்கைதீவு மீன்சந்தையை அகற்ற முடிவு!

Thursday, March 31st, 2016

காக்கைதீவு, இறங்குதுறைக்கு அண்மையில் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வருகின்ற சந்தையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் தெரிவித்தள்ளார்.

காக்கைதீவு மீனவர்களின் நலன்கருதி இறங்குதுறைக்கு அருகில், மீன் ஏல விற்பனை மண்டபமும் அதன் அருகில் மீன் சந்தையும் அமைக்கப்பட்டது. ஏல விற்பனை மண்டபம் பயன்படுத்தப்படுகின்ற போதும், மீன் சந்தையானது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு, பிறிதொரு இடத்தில் இயங்கியது.

அந்த சந்தையானது சுகாதாரச் சீர்கேடான முறையில் இருந்தது. அங்கு மீன்கள் நிலத்தில் வைத்து விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகளும் நுகர்வோரும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

இதனால், இந்தச் சந்தையானது ஒரு வார காலத்துக்குள் அகற்றி, உரிய கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதேச சபை செயலாளர் அறிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106