20-20 போட்டியிலும் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி!
Wednesday, September 28th, 2016
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றியீட்டியது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 59 ஓட்டங்களையே பெற முடிந்தது.லசந்தி மதுஷானி பெற்ற 17 ஓட்டங்களே அணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகப் பதிவானது.
பந்துவீச்சில் கிறிஸ்டன் பீம்ஸ் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.வெற்றி இலக்கான 60 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியை அடைந்தது.
ஏலிஸ் விலானி 34 ஓட்டங்களையும் பென் மூனி 29 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.இரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-0 எனும் கணக்கில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106