செக்.குடியரசின் ஜனாதிபதி இலங்கை விஜயம்!
Tuesday, September 27th, 2016
செக் குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் செமன் ,வெளியுறவு அமைச்சர் லுபோமீர் சரோலெக் ஆகியோர் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார்கள் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவு ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும் இலங்கையின் வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடனுமே இவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த விஜயத்தை தொடர்ந்து செக். குடியரசின் ஜனாதிபதி கொலம்பியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவ் உத்தியோகபூர்வ விஜயங்கள் இரு நாடுகளுக்குமிடையே சமூக, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியமானதாக கருதப்படுவதோடு இவை வரலாற்று சிறப்பம்சமிக்க விஜயமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தொடர்மாடி வீடுகளுக்கு தபால் பெட்டிகள் அவசியம்!
கடந்த ஆண்டின் உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயார் நிலையில் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு...
செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய நாடாக இலங்கை இருக்கும...
|
|
|


