பாடசாலைக்கு பின்னான கல்வி முறைமை அறிமுகம்..!!
Thursday, March 31st, 2016
நாட்டில் தற்போதுள்ள கல்வி முறைமையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரோயல் கல்லூரியில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இம் மாற்றத்தினை எதிர்வரும் மே மாதத்திலிருந்து அமுலுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதாகவும் இத்திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு பின்னரான கல்வி முறைமை என்றொரு திட்டத்தினை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்
இதன் மூலம் பாடசாலையை முடித்த மாணவர்களுக்கு அவர்களது உயர் கல்வியை தொடர, அதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும். இத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி, மற்றும் உரிய அமைச்சர், அறிவியல்வாதிகள் என அனைவரிடமும் கலந்துரையாடியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கம் என இரண்டும் ஒன்றிணைந்து சேவையாற்ற முடியும்.
இத்திட்டத்திற்கென தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்கள் அமைச்சின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இத்திட்டத்துக்கென நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து சுமார் 6 சதவீதம் வரை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106