யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் கவனத்திற்கு!
Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் தங்களது பதிவுகளை உடனடியாகக் கல்லூரியில் பதிவு செய்யுமாறு அதிபர் கேட்டுள்ளார்.
குறிப்பிட்ட மாணவர்களின் பெயர் விபரம் கல்லூரியின் பெயர்ப் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மேற்படி மாணவர்களை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம்-09 ஆம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் அதற்கு வசதியாக நாளை-27 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பெயர் மற்றும் தத்தமது துறைகள் தொடர்பான விபரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Related posts:
பருவ மழை பொய்த்ததால் வயலுக்கு பவுஸர் தண்ணீர் பாச்சல்!
தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம்...
புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட பொதுப் போக்கவரத்து சேவைகள் முன்னெடுப்பு - போக்குவரத்துச் சபை ...
|
|
|


