முன்னாள் அமைச்சரின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு!
Saturday, October 1st, 2016
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் அடிப்படை உரிமை மனு நேற்று(30) உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தேசியப் பட்டியல் உறுப்பினராக செயற்பட்டு வந்த தனக்கு, மீண்டும் குறித்த உறுப்பினர் பதவியை பெற்றுத் தருமாறும், பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அபேட்சகர்கள் 11 பேருக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் உறுப்புரிமையை செல்லுபடியற்றதாக மாற்றுமாறும் வேண்டி முன்னாள் அமைச்சரும் இலங்கை சமசமாஜக் கட்சியின் செயலாளருமான திஸ்ஸ விதாரண முன்வைத்திருந்த அடிப்படை உரிமை மனுவையே உயர் நீதிமன்றம் நேற்றையதினம் நிராகரித்துள்ளது.
குறித்த இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அடிப்படையற்றது என உயர் நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது

Related posts:
நிதிமோசடிப் பிரிவு கலைக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - பிரதியமைச்சர் ரஞ்சன்
மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழிழ்ப்பாணத்தில் பலரும் அஞ்ச...
யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது - வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான க...
|
|
|


