ஆப்கானிஸ்னுக்கெதிரான போட்டிக்கு பங்களாதேஷ் அணி அறிவிப்பு!
Friday, September 23rd, 2016
பங்களாதேசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்கையில், முதலிரண்டு போட்டிகளுக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமில், முதற் தடவையாக துடுப்பாட்டவீரர் மொசாதிக் ஹொஸைன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தவிர, வேகப்பந்து வீச்சாளர் ஷபிகுல் குழாமுக்கு திரும்பியுள்ளார். எவ்வாறெனினும் வேகப்பந்துவீச்சாளர் அல்-அமின் ஹொஸைன் குழாமில் இடம்பெறவில்லை.
இது தவிர, கடந்த நவம்பரில் இடம்பெற்ற சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருக்காத வேகப்பந்துவீச்சாளர் ருபெல் ஹொஸைன், சுழற்பந்துவீச்சாளர் தஜிகுல் இஸ்லாம் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் முஸ்டாபிசுர் ரஹ்மான், காயமடைந்த காரணமாக குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
குழாம்: தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், இம்ரல் கைஸ், மொசாதிக் ஹொஸைன், ஷகிப் அல் ஹஸன் (உபதலைவர்), மஹ்முதுல்லா, நசீர் ஹொஸைன், முஷ்திபிகார் ரஹீம், சபீர் ரஹ்மான், தஜிகுல் இஸ்லாம், மஷ்ரபி மோட்டார்சா (தலைவர்), ஷபிகுல் இஸ்லாம், ருபெல் ஹொஸைன்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106
