அமெரிக்க போர் விமானம் ஜப்பானில் விபத்து!
Friday, September 23rd, 2016
அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று ஜப்பானின் ஒகினாவோ மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒகினோவாவில் உள்ள அமெரிக்க படைத்தளமான கடானாவிலிருந்து புறப்பட்ட ஏவி – 8பி என்ற ஜெட் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை அமெரிக்க தரப்பில் இருந்து விபத்து குறித்து எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எனினும் குறித்த விமானத்தின் விமானி பாதுகாப்பாக வெளியேறியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில்இ விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்: ஜப்பானை மிரட்டும் வடகொரியா!
ஜப்பான் பிரதமரை மிரட்டிய டிரம்ப்!
பேருந்தும் லொரியும் மோதி கோர விபத்து - 19 பேர் உயிரிழப்பு!
|
|
|


