வடக்கு மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணியவர் சாய் முரளி – ஆளுநர் பாராட்டு!……

Tuesday, November 24th, 2026


யாழ்ப்பாணத்திலிருந்து சாய் முரளி வெளியேறினாலும், வடக்கு மாகாண மக்களுடன் அவர் உருவாக்கிய உறவும் நட்பும் தொடரும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றிய சாய் முரளியின் பிரிவுபசார நிகழ்வு நேற்று (23.11.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய ஆளுநர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக வடக்கு மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய சாய் முரளி, எளிமையான அணுகுமுறையாலும் மக்களுடனான நட்புறவாலும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பேரிடர் கால உதவிகள், சுகாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் தேவைகளுக்காக இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும் ஆளுநர் பாராட்டினார்.

புதிய பொறுப்பில் அவர் மேலும் உயரங்களை அடைய வாழ்த்திய ஆளுநர், வடக்கு மக்களுடனான உறவைத் தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது


000

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106