அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் – சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகள்!
Monday, November 23rd, 2026
….
அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேர் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே இக்குழு வருகை தந்ததாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்த போதிலும், தமது அமைச்சு அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் உதவியைக் கோரவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்கத் தூதரகம் ஊடாக காவல்துறை மாஅதிபர் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் உதவியைக் கோரியிருந்ததை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரம் குறித்து தம்மிடம் ஆலோசிக்கப்படவில்லை எனவும், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கு இலங்கைக்குள் சுயாதீனமான விசாரணை அதிகாரம் கிடையாது எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்கள் மற்றும் மோசடி நிலையங்கள் குறித்த விசாரணைகளில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக நவம்பர் 16 முதல் 22 வரை கொழும்பிற்கு விஜயம் செய்த அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க நீதித் திணைக்கள அதிகாரிகள், சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட 80 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களைப் பரிசோதித்துள்ளனர்.
அத்துடன், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தடயவியல் தொடர்பான பயிற்சிகளையும் இக்குழு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106