நாடளாவிய ரீதியில் ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள்!

Monday, November 23rd, 2026


…..
நாடளாவிய ரீதியில் 4,861 ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் 386 ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், மாகாண ரீதியாக நோக்கும்போது அதிகளவான ஆசிரியர் பற்றாக்குறை மத்திய மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 1,045 ஆக உள்ளது.

மேலும், மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறையானது வட மாகாணத்தில் 868 ஆகவும், மேல் மாகாணத்தில் 708 ஆகவும், வடமத்திய மாகாணத்தில் 465 ஆகவும், வடமேல் மாகாணத்தில் 397 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் 319 ஆகவும், சப்ரகமுவ மாகாணத்தில் 268 ஆகவும், தென் மாகாணத்தில் 224 ஆகவும் மற்றும் ஊவா மாகாணத்தில் 181 ஆகவும் காணப்படுகின்றது.

பாடப்பிரிவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, அதிகளவான வெற்றிடங்கள் ஆரம்பப் பிரிவு ஆங்கிலப் பாடத்திலேயே நிலவுவதுடன், அந்த எண்ணிக்கை 2,992 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, பொது ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் 682 உம், சாதாரண தர ஆங்கிலப் பாடத்திற்கு 669 உம், க.பொ.த உயர்தரப் பிரிவிற்கு 438 வெற்றிடங்கள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 11 ஆம் தரங்களுக்கான ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக இவ்வருடத்தில் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2022-2024 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106