கடந்த 11 மாதங்களில் 2,330 வீதி விபத்துக்கால் – 2,463 பலி!
Monday, November 23rd, 2026
…..
2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 2,330 வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
காணொளியொன்றின் ஊடாக கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் காலப்பகுதியில் 5,868 பாரிய வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் காயமடைந்தவர்களில் சுமார் 50 சதவீதமானோரின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, 9,870 சிறு விபத்துக்களும், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த 4,488 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் பாதசாரிகள் என்பதுடன், அவர்களின் எண்ணிக்கை 813 ஆகும்.
உயிரிழந்த பாதசாரிகளில் பெரும்பாலானோர் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதுடன், பாதசாரிகளின் கவனயீனமும் அஜாக்கிரதையுமே இந்த உயிரிழப்புகளுக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன.
அத்துடன், 876 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிள்களின் பின் இருக்கையில் பயணித்த 168 பேரும் அடங்குகின்றனர்.
மேலும், துவிச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் 165 பேரும், சாரதிகள் 190 பேரும், பயணிகள் 240 பேரும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு உயிராபத்து விபத்துக்களின் எண்ணிக்கை 11 ஆல் அதிகரித்துள்ள போதிலும், விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆல் குறைவடைந்துள்ளதாக பிரதி காவல்துறை மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையிலும் கவனயீனமாகவும் வாகனம் செலுத்துவோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், மதுபோதை சாரதிகளைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் கவலைக்குரிய வகையில் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய தொழில்சார் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் இன்று உரையாற்றிய போதே அவர்இதனை தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு பல்கலைக்கழகப் பட்டம் மட்டுமே ஒரே தீர்வல்ல என வலியுறுத்திய அவர், மாணவர்களின் திறமை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்பப் பல்வேறு தொழில்முறை கல்வி வாய்ப்புகளைத் திறந்து கொடுப்பதே தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தொழிற்கல்வித் துறையை மேம்படுத்துவதுடன், அதற்கான பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைக் கல்வியை வலுப்படுத்துவதிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106