பாதீட்டில் எதுவும் இல்லை –  பல துறையினர் ஒன்றிணைவு – நாளை நாடளாவிய போராட்டம்!

Sunday, November 22nd, 2026


…
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் தங்களது துறைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனப் பல்வேறு தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதனையடுத்து, பாதீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 23ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார உதவிப் பணியாளர்கள், தாதியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்றப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிளைச் சங்கங்களினதும் அவசரக் கூட்டங்களை நடத்துவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவசர சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் உபய பண்டார வரகாகொட கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் பயணச் செலவு மற்றும் அலுவலகச் செலவுகளுக்கான கொடுப்பனவுகள் போதியளவு அதிகரிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பிரஜா சக்தி வேலைத்திட்டத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பணிகளிலிருந்தும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் விலகத் தீர்மானித்துள்ளனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106