நாட்டில் முதியோர் சனத்தொகை வேகமாக அதிகரிப்பு!

Sunday, November 22nd, 2026


…….
இலங்கையில் முதியோர் சனத்தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனைப் புதிய பொருளாதார வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முடியும் என மனிதவளத்துறை நிபுணர் கலாநிதி ஹீதர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் சனத்தொகையில் 12.3 சதவீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்துள்ளனர்.

உலக வங்கியின் கணிப்பின்படி, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்த விகிதம் சுமார் 25 சதவீதமாக அதிகரிக்கக்கூடும்.

முதியோருக்கான சுகாதாரப் பராமரிப்பு, காப்புறுதி, சேமிப்புத் திட்டங்கள், தொழில்நுட்ப உதவிச் சாதனங்கள் மற்றும் வங்கிச் சேவைகளுக்கான தேவை அதிகரிப்பதன் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 60 வயதைக் கடந்த அனுபவமிக்க பணியாளர்களைத் தொடர்ந்து பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுக்குப் பின்னரும் பகுதி நேர வேலை, வீட்டிலிருந்து பணியாற்றுதல் மற்றும் தொழில்முனைவோர் நடவடிக்கைகள் ஊடாக முதியோர் பொருளாதாரத்தில் பங்களிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதியோர் சனத்தொகை அதிகரிப்பைச் சுமையாகக் கருதாமல், அவர்களின் அனுபவம் மற்றும் திறன்களைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றுவதே ‘வெள்ளிப் பொருளாதாரத்தின்’ முக்கிய நோக்கமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106