நாட்டில் 52.5 சதவீதமானோர் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அகற்றுகின்றனர் – புள்ளிவிவரத் திணைக்களம் !…….
Sunday, November 22nd, 2026
இலங்கையில் 52.5 சதவீதமான குடும்பங்கள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அகற்றுவதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 25.3 சதவீதமான குடும்பங்கள் கழிவுகளை உள்ளூராட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கின்றன. 12.3 சதவீதமானோர் தமது வளாகங்களிலேயே கழிவுகளை அகற்றுவதுடன், 9 சதவீதமானோர் கழிவு சேகரிப்பாளர்களிடம் ஒப்படைக்கின்றனர். ஏனைய 0.9 சதவீதமானோர் வேறு முறைகளைக் கையாளுகின்றனர்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பது தடைசெய்யப்பட்டுள்ள போதிலும், குறிப்பாக கிராமப்புறங்களில் இந்நடைமுறை தொடர்வதாக தேசிய திண்மக்கழிவு முகாமைத்துவ ஆதரவு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி அமைப்புகளில் போதிய பணியாளர்கள் மற்றும் கழிவுகளைச் சேகரிப்பதற்கான வாகனங்கள் இல்லாமை, சுற்றாடல் காவல்துறையினரின் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை ஆகியவை இத்தடையை நடைமுறைப்படுத்துவதில் சவால்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகச் சேகரித்து, வகைப்படுத்தி மீள்சுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 2025 முதல் 2027 வரையான காலப்பகுதிக்கான பொருள் மீட்பு நிலையத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் சுற்றாடலில் கலப்பதையும், அவை எரித்து அகற்றப்படுவதையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106