10.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தஇந்தியாவின் உட்கட்டமைப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி!
Sunday, November 22nd, 2026
இந்தியாவின் உட்கட்டமைப்புத் துறை உற்பத்தி, கடந்த ஒக்ரோபர் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 10.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
திருத்திய தரவுத் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய வளர்ச்சி இதுவென இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி உற்பத்தி 23.1 சதவீதமும், மின்சார உற்பத்தி 21.6 சதவீதமும், இரும்புத் தாது உற்பத்தி 26.4 சதவீதமும் அதிகரித்துள்ளன. அத்துடன், சீமெந்து உற்பத்தி 15.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்னர் செப்டெம்பர் மாதத்தில் 8.2 சதவீத வளர்ச்சி பதிவாகியிருந்தது.
எனினும், மசகு எண்ணெய் உற்பத்தி 4.1 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 7.6 சதவீதமும், உர உற்பத்தி 12.2 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்ரோபர் வரையான காலப்பகுதியில் இந்தியாவின் உட்கட்டமைப்புத் துறை உற்பத்தி 6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த வளர்ச்சி 2.3 சதவீதமாகக் காணப்பட்டது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106