வேலணை பிரதேச சபையில் முன்பள்ளிச் சிறார்களுக்கு கௌரவமான பிரியாவிடை!

Friday, November 20th, 2026


…..
வேலணை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வேலணை முன்பள்ளியில் கல்வி பயின்று, தரம் ஒன்றுக்குச் செல்லவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் கௌரவிப்பு நிகழ்வு இன்று (18.11.2026) வேலணை பிரதேச சபையில் நடைபெற்றது.

பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து அடுத்த கல்விப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள சிறார்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

இதன்போது, சிறார்களின் ஆற்றல்கள் மற்றும் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பக்குவப்படுத்தி கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு வழிகாட்டிய முன்பள்ளி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

சிறார்களின் ஆரம்பக் கல்விப் பயணத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106