இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவையை ஆரம்பிக்க மத்தியிடம் நிதி கோரும் தமிழகம்!

Thursday, November 19th, 2026


….
இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான சர்வதேச பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது உள்ளிட்ட ஐந்து முக்கிய கடல்சார் உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக தமிழக அரசு இந்திய மத்திய அரசிடம் நிதியுதவி கோரியுள்ளது.

புதுடெல்லியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மொத்தம் 9,600 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

இதில், 118 கோடி இந்திய ரூபாய் செலவில் இராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்தி, அங்கிருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது முக்கிய திட்டமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள், குடிவரவு மற்றும் சுங்க நடைமுறைகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் உரிய அனுமதிகளுடன் படிப்படியாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, கடலூரில் 4,700 கோடி இந்திய ரூபாய் செலவில் புதிய ஆழ்கடல் துறைமுகம் அமைத்தல், சென்னை மெரினா, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் படகுத் துறைகள் மற்றும் கடல்சார் நடைபாதைகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் நிதி கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை – புதுச்சேரி இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்காக 900 கோடி இந்திய ரூபாய் முதலீட்டுக்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான தற்போதைய பயணிகள் கப்பல் சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வருமாயின், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் போக்குவரத்து, வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106