நாட்டில் இவ்வாண்டு வீதி விபத்துகளில் 2,414 பேர் உயிரிழப்பு – வெளியானது அதிர்ச்சித் தகவல்!

Wednesday, November 18th, 2026


…….
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2,414 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி போக்குவரத்து விபத்துகளைத் தடுப்பதற்கான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக குறித்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ருவான் துஷார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

“இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் 2026 நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,414 ஆக உயர்ந்துள்ளது. இது மாதமொன்றுக்கு சுமார் 230 பேர் உயிரிழப்பதற்குச் சமமான அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையாகும்.

மேலும், இந்த ஆண்டின் எஞ்சியுள்ள ஒன்றரை மாத காலப்பகுதியில் சுமார் 350 பேர் மேலதிகமாக உயிரிழக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனால் வீதி விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை பதிவான உயிரிழப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் உந்துருளி விபத்துகளிலும், 800க்கும் அதிகமானோர் பாதசாரிகளாகச் சென்றபோதும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு பிரிவுகளிலும் மாத்திரம் சுமார் 2,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106