சந்தையில் முட்டை விலை திடீர் அதிகரிப்பு!

Wednesday, November 18th, 2026


……
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.

தற்போது சந்தையில் ஒரு முட்டை 42 முதல் 45 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் சந்தையில் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளமை ஆகியன விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனமழை காரணமாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கோழிப் பண்ணைகளில் சுமார் 80 சதவீதமாகக் காணப்பட்ட உற்பத்தித் திறன், தற்போது 50 முதல் 60 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கோழித் தீவனத்திற்குத் தேவையான மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகளும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதால் உற்பத்திச் செலவுகள் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வெதுப்பகங்கள் தயாரிப்புகளை ஆரம்பித்துள்ளதால் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, செயற்கையான முறையில் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும், கேள்வி மற்றும் விநியோகத்திற்கு இடையிலான மாற்றமே விலை உயர்வுக்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முட்டை விலை அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தொடரக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106