செயற்கை நுண்ணறிவு யுகத்துக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

Tuesday, November 17th, 2026


……

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றிவரும் உலகுக்கு ஏற்ற அறிவு, திறன்கள் மற்றும் சிந்தனை ஆற்றலுடன் மாணவர்களைத் தயார்ப்படுத்துவது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

‘Future Ready – Small Steps. Big Dreams’ நூலின் இலங்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (17.11.2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஹூவர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், செயற்கை நுண்ணறிவு மாணவர்களுக்காகச் சிந்திக்கும் மாற்றாக அமைந்துவிடக்கூடாது என்றும், அவர்கள் மேலும் சிறப்பாகச் சிந்திப்பதற்கு உதவும் கருவியாகவே அதனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறனுடன் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, பொறுப்புடனும் நெறிமுறைகளுக்கு அமைவாகவும் பயன்படுத்தும் ஆற்றலையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களிடம் காணப்படும் திறமைகளையும் புத்தாக்கச் சிந்தனைகளையும் பாராட்டிய அவர், அவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்குச் சரியான வழிகாட்டலும் போதிய வாய்ப்புகளும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

மாறிவரும் மாணவர்களின் உலகைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவதில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்குக் கூட்டுப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதேநேரம் அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்த ஆளுநர், இவ்வாய்ப்புகள் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் வளங்கள் குறைந்த கிராமப்புறப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.

மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடமும் பல்கலைக்கழகத்தின் அறிவு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேந்திரகுமார் மற்றும் நூலாசிரியர் லோகன் நாதன் ஆகியோரும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106