அமரர் இந்திராணி லோகராணியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!
Tuesday, November 17th, 2026
………
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் துவாரகா ஜெயகாந்தனின் தாயாரான அமரர் இந்திராணி லோகராணியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
உடல்நலக் குறைவு காரணமாக அமரர் இந்திராணி லோகராணி தனது 68 ஆவது வயதில் இன்றையதினம் (17.11.2026) காலமானார்.
அன்னாரின் பூதவுடல் ஏழாலை மேற்கு பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், மேலதிக அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், கட்சியின் முக்கியஸ்தர், கந்தசாமி கமலேந்திரன், வலி வடக்கு அமைப்பாளர் ஜெயபாலசிங்கம் அன்பு, வலி மேற்கு பிரதேச அமைப்பாளர் செல்வக்குமார் மற்றும் வேலணை பிரதேச மேலதிக அமைப்பாளர் திருமதி அனுசியா ஜெயகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, அமரரின் மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.





000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106