அமரர் சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!
Monday, November 16th, 2026
…..
வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரும், நாடாளுமன்ற மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான, அமரர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் (தோழர் கிபி) தலைமையிலான முக்கியஸ்தர்கள், வல்வெட்டித்துறை நெடியகாட்டிலுள்ள அன்னாரது இல்லத்திற்குச் சென்று பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி தமது இறுதி மரியாதையைத் தெரிவித்தனர்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் “சொல்லின் செல்வர்” இரா. செல்வடிவேல், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் தி. ஞானவேல், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் அ. ரட்ணகுமார், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாகச் செயலாளர் இந்திரராசா துஷிகரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான தோழர் சதீஸ், சசிரேகா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் மற்றும் மக்கள் பணியில் நீண்டகாலம் ஈடுபட்டிருந்த அமரர் எம்.கே. சிவாஜிலிங்கம் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது









000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106