தீவகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வேலணையில் விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை!
Monday, November 16th, 2026
……
சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த வழிகாட்டிகளாக முச்சக்கர வண்டிச் சாரதிகளைத் தயார்படுத்தும் நோக்கில் வேலணையில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று (16.11.2026) நடைபெற்றது.
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சும் சுற்றுலாத்துறையும் இணைந்து முன்னெடுக்கும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகவே, வேலணை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை இன்று (16.11.2026) வேலணை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, தீவகப் பகுதிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதுடன், அப்பகுதியின் வரலாற்று, கலாசார, பாரம்பரிய மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் உரிய தகவல்களை வழங்கக்கூடிய வழிகாட்டிகளாக முச்சக்கரவண்டி சாரதிகளைத் தயார்படுத்துவதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
தீவகப் பகுதிகள் இயற்கை அழகு, வரலாற்றுச் சிறப்புகள், மத மற்றும் கலாசார அடையாளங்கள், பாரம்பரிய வாழ்வியல் அம்சங்கள் எனப் பல்வேறு சுற்றுலா வளங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நயினாதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு, வேலணை உள்ளிட்ட தீவகப் பகுதிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், அவர்களுக்கு முறையான வழிகாட்டல் மற்றும் தரமான போக்குவரத்துச் சேவைகளை வழங்குவது அவசியமாகியுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுடன் எவ்வாறு நட்புறவுடன் நடந்துகொள்வது, அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவது, சுற்றுலாத் தலங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் விருந்தோம்பல் பண்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்களில் அறிவூட்டும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுற்றுலாத்துறை என்பது ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா மையங்களுடன் மட்டும் தொடர்புடையதல்ல.
சுற்றுலாப் பயணிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் போக்குவரத்துச் சேவை வழங்குநர்களும் இத்துறையின் முக்கிய பங்காளிகளாக உள்ளனர்.
அந்த வகையில், முச்சக்கரவண்டி சாரதிகளின் சேவைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தீவகத்தின் சுற்றுலாத்துறையையும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பயிற்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம் தீவகத்தைச் சிறந்த சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதுடன், உள்ளூர் போக்குவரத்துச் சேவையாளர்களுக்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106