காணிகளை விடுவிக்காமல் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குவது யாருக்காக? – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் கேள்வி!

Sunday, November 15th, 2026


……
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் அர்த்தபூர்வமானதாக இருக்க வேண்டுமாயின், மக்களை மீள்குடியேற்றுவதற்கு மானசீகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

22 ஆவது வாரமாக பலாலி மக்களினால் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பை வலியுறுத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வலி வடக்கு மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அந்தவகையில் பலாலி மக்களினால் 22 ஆவது வாரமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்துள்ள ஜனாதிபதி அவர்கள், வடக்கு கிழக்கு மீள்குடியேற்றத்திற்காக 4000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு முன்மொழிந்துள்ளார்.

ஏற்கனவே 6000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக 4000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்தாக சொல்லப்பட்டள்ளது.

மக்கள் மீள்குடியேற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாமல் காலம் தாழத்தப்படுகின்ற நிலையில், இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இது வெறுமனே அரசியல் அறிவிப்பா என்ற சந்தேகத்தினை மக்களுக்கு ஏற்படுத்துகின்றது.

எனவே, இதயசுத்தியோடு வரவு செலுவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருக்குமானால் காணிகளை விடுவிப்பதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106