உடல் நலத்துடன்மீண்டெழுவார் என்றநம்பிக்கையைஅவரது இழப்பின் துயரச் செய்தி உடைத்து விட்டது – சிவாஜிக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Sunday, November 15th, 2026


……..
உடல் நலத்துடன்
மீண்டெழுவார் என்ற
நம்பிக்கையை
அவரது இழப்பின் துயரச்செய்தி
உடைத்து விட்டது என சிவாஜிலிங்கத்தின் இழப்புக் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தனது அஞ்சலிக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடிகையில் –

எண்ணிய இலக்கு ஒன்றாக இருப்பினும்,
பயணத்தின் வழிமுறையும்
பொறிமுறையும்
இரு வேறு பாதைகளை
வகுத்தன.

ஆயினும்
அரசியல் களத்தில்
நண்பர் சிவாஜிலிங்கம்
அவர்களின் உறவு
இறுதி வரை நீடித்து வந்தது.

அவர் நேசித்த தமிழீழ விடுதலை
இயக்கம் என்ற ரெலோ இயக்கத்துடன்
சகோதர இயக்கம் என்ற வகையில்
நானும் உறவில் இருந்தவன்.

களமாடிய காலங்களிலும்
உள்ளியக்க ஆபத்து வேளைகளிலும்
சக இயக்கம் ரண களம் ஆடிய போதும்
அவர்களுக்கு கரம் நீட்டி தோள் கொடுத்து நின்றிருக்கின்றேன்.

அவ்வேளைகளில் நண்பர் சிவாஜிலிங்கம் அவர்களும்
நெருங்கிய தொடர்புகளோடு இருந்தவர்.

அவர் எண்ணிய இலக்கு
ஈடேறட்டும்,.
உடல் நலத்துடன் அவர்
மீண்டெழுவார் என்ற
நம்பிக்கையை
அவரது இழப்பின் துயரச்செய்து
உடைத்து விட்டது.

அவரது குடும்பத்தவர்கள், உறவுகள், கட்சி சார்ந்தவர்கள்,
மற்றும் ஆதரவாளர்களுக்கு
ஆறுதல் கூறுகின்றேன்.

ஆழ்மன அஞ்சலி மரியாதை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106