தீப்பற்றும் அபாயம் –  720,796 BMW ரக மகிழுந்துகளை மீள அழைக்கும் நிறுவனம்! 

Sunday, November 15th, 2026

தீப்பற்றும் அபாயம் காரணமாக 720,796 BMW ரக மகிழுந்துகளை மீள அழைக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA), குறித்த வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு விசேட அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, குறித்த வாகனங்கள் பழுதுபார்க்கப்படும் வரை வீடுகள், கட்டடங்கள் மற்றும் ஏனைய வாகனங்களிலிருந்து தொலைவில் திறந்தவெளியில் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மகிழுந்தின் இயந்திரம் நிறுத்தப்பட்ட நிலையில் இருக்கும்போதும் தீப்பற்றும் அபாயம் காணப்படுவதாக BMW நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்கள் 2024ஆம் ஆண்டிலும் நீர்ப்பம்பியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாக மீள அழைக்கப்பட்டு பழுதுபார்க்கப்பட்டிருந்தன. எனினும், அந்தப் பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பின்னரும் சுமார் 10 தீப்பற்றல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அந்தச் சம்பவங்களுக்கும் தற்போது கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினைக்கும் தொடர்பு இருக்கலாம் என BMW நிறுவனம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

நீர்ப்பம்பியுடன் இணைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பான் முறையாக நீர்ப்புகாத வகையில் மூடப்படாததால், அதற்குள் நீர் உட்புகுந்து மின்சாரக் குறுக்கிணைப்பு ஏற்படக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக வாகனங்கள் தீப்பற்றுவதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீளழைப்பில் 2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட BMW 2 Series, 3 Series, 4 Series, 5 Series, X1, X3, X4, X5 மற்றும் Z4 ஆகிய ரகங்களைச் சேர்ந்த சில வாகனங்கள் உள்ளடங்குகின்றன.

குறித்த வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளை சரிசெய்வதற்கான தீர்வொன்றை BMW நிறுவனம் தற்போது தயாரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடையும் வரை குறித்த வாகனங்களை வீடுகள், கட்டடங்கள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு அருகில் நிறுத்தி வைப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வாகனத்தின் இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தாலும் தீப்பற்றும் அபாயம் காணப்படக்கூடும் என்பதால், குறித்த ரக வாகனங்களின் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

000

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106