காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – சிவில் சமூக அமைப்புகளுடன் யாழில் விசேட செயலமர்வு!

Saturday, November 14th, 2026


…….
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகள், பொறுப்புகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் புரிதலை வலுப்படுத்தும் நோக்கில் விசேட செயலமர்வு நேற்று (13.11.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வை இலங்கை தேசிய சமாதானப் பேரவையும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா  கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் –

யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக 2,249 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 983 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது மட்டுமே தீர்வாகாது என்றும், அவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உண்மையை அறிந்துகொள்ளும் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, OMP அலுவலகத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்த அரசாங்க நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து குடும்பங்களுக்கு தகவல்களை வழங்குவதே அந்த அலுவலகத்தின் பிரதான பொறுப்பு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலிகளைப் புரிந்துகொண்டு அரச உத்தியோகத்தர்கள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் த. செல்வகுமார், அலுவலகத்தின் பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது கரிசனைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்களை முன்வைத்ததுடன், அவை தொடர்பில் விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் ஜெயதீபா, மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106