இந்தியாவை 89 ஓட்டங்களுக்குள் சுருட்டிய நியூசிலாந்து!
Saturday, November 14th, 2026
நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி 244 ஓட்டங்களால் படுதோல்வியடைந்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணியின் வில் யங் 108 பந்துகளில் 125 ஓட்டங்களைப் பெற்று அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் அக்ஷர் பட்டேல் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்படி, 334 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் இஷான் கிஷன் அதிகபட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றார்.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெட் ஹென்றி இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை நிலைகுலையச் செய்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரையும் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு ஆரம்பத்திலேயே கேள்விக்குறியானது. குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்திய ஹென்றி, தனது துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.
இந்திய அணியின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் முறையில் ஆட்டமிழந்தார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் போட்டியிலேயே ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான பதிவையும் அவர் பெற்றார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மெட் ஹென்றி 27 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

000
‘000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106