தேசிய நூலக விருதுகளில் சாதனை படைத்த பூநகரி பிரதேச சபை!

Saturday, November 14th, 2026


…..
நூலகங்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியில் ஒரே தடவையில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்று பூநகரி பிரதேச சபை சாதனை படைத்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளைச் சிறப்பாக முன்னெடுத்தமைக்காக, பூநகரி பிரதேச சபையின் மூன்று பொதுநூலகங்களுக்கு தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் தேசிய விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பூநகரி பிரதேச சபையின் கீழ் இயங்கும் வாடியடி, பல்லவராயன்கட்டு மற்றும் இரணைமாதா நகர் ஆகிய மூன்று பொது நூலகங்களும் இவ்வாண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.

கொழும்பில் இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், குறித்த நூலகங்களின் நூலகர்கள் பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையில் ஒரே தடவையில் மூன்று நூலகங்களுக்கு தேசிய விருதுகளைப் பெற்றுக்கொடுத்த ஒரேயொரு தமிழ்ப் பிரதேச சபையாக பூநகரி பிரதேச சபை இம்முறை சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு தேசிய மட்டத்தில் பூநகரி பிரதேச சபையின் இரண்டு நூலகங்கள் விருதுகளைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை மேலும் ஒரு நூலகமும் விருதுப் பட்டியலில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூநகரி பிரதேசத்தின் நூலகங்களின் வளர்ச்சி, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் நூலகர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்தச் சாதனை அமைந்துள்ளதுடன், இதற்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106