உருவாகிறது ‘அக்வான்’ புயல் – வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு – பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை!

Friday, November 13th, 2026


……
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் புயலாக வலுப்பெறவுள்ளதாகவும், அதற்கு ஈரான் நாடு பரிந்துரைத்துள்ள ‘அக்வான்’ (Akwan) எனும் பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  (13.11.2026) வெளியிட்டுள்ள வானிலைத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் புயலாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயலின் நகர்வுப் பாதை மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் வெவ்வேறு வானிலை மாதிரிகளிடையே மாறுபட்ட கணிப்புகள் காணப்படுகின்றன.

எனினும், தற்போதைய கணிப்புகளின்படி எதிர்வரும் 19.11.2026 அன்று இரவு ஆந்திர மாநிலத்தின் மொலட்டிமோகா பகுதிக்கு அண்மையில் இந்தப் புயல் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், எதிர்வரும் நாட்களிலேயே புயலின் நகர்வுப் பாதை மற்றும் அது கரையைக் கடக்கக்கூடிய இடம் தொடர்பில் தெளிவான முடிவுக்கு வரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புயலின் தாக்கம் காரணமாக நாளை (14.11.2026) முதல் கிழக்கு மாகாணத்திலும், எதிர்வரும் 15.11.2026 முதல் கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மிதமானது முதல் கனமானது வரையிலான மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வானிலை மாற்றங்களை மக்கள் அவதானத்துடன் பின்தொடர்வதுடன், உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகளையும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106