அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய்வு!
Friday, November 13th, 2026
…..
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் உபகுழு விரிவான ஆராய்வை மேற்கொண்டுள்ளது.
கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட இந்த உபகுழுக் கூட்டம், அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள வேறுபாடுகள் தொடர்பில் அதிபர் சேவைத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தமது கவலைகளை முன்வைத்தனர்.
2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு மாறுவது பதவி உயர்வாகக் கருதப்படாமல் புதிய நியமனமாகக் கருதப்படுவதால் இந்தச் சம்பள முரண்பாடு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், 03/2014 சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்படும் சரிசெய்தல் கொடுப்பனவு இருந்தபோதிலும், சேவைக்காலம் அதிகரிக்கும்போது சம்பள இடைவெளி மீண்டும் உருவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அதிபர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அதிபர் சேவையில் இணைவதற்கும் தயக்கம் காட்டுவதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து, சம்பள ஆணைக்குழுவுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், அதிபர் சேவையினர் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106