புலம்பெயர் சக்தியொன்று பின்பலமாக இருக்கின்றது என்ற செய்தி ஈ.பி.டி.பி. செயற்பாடுகளை வீரியப்படுத்தும் – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த்…..

Friday, November 13th, 2026

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் எழுச்சி நாளாக நவெம்பர் 10 ஆம் நாள் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்ச்செல்வம், புலம்பெயர் தேசம் எங்கும் இருக்கின்ற ஈ.பி.டி.பி. ஆதரவு சக்திகள் ஒன்றிணைந்து, கட்சியின் மக்கள் நலச் செயற்பாடுகளுக்கான பின்பலமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் 69 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஈ.பி.டி.பி. கட்சியின் புலம்பெயர் முக்கிஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ரிக்ரொக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் இக்கருத்தினை வெளிப்படுத்தினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

‘எங்களின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார். இருந்தபோதிலும் தன்னை நேசிக்கின்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் சில நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு அனுமதியளித்திருக்கின்றார்.

அந்தவகைளில் அவருடைய பிறந்த தினத்தில் சமூக ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் போன்றோரினால் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை அவதானிக்கின்றபோது மகிழ்ச்சி அளிக்கின்றது.

நவெம்பர் 10 ஆம் திகதி என்பது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் எழுர்ச்சி நாளாகவே காட்சியளித்தது. இந்த உணர்வும் கட்சி மீதான பற்றுறுதியும் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்படுமானால் எந்த சக்தியினாலும் எம்மை மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்த முடியாது.

அதேபோன்று, பல்வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் எமது புலம்பெயர் செயற்பாட்டாளர்களினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இது நிச்சயமாக புலத்தில் இருக்கின்ற எமக்கு மகிழ்ச்சியையும் புதிய உத்வேகத்தினையும் அளிக்கின்றது.

இவ்வாறு புலம்பெயர் தேசமெங்கும் வாழுகின்றன ஈ.பி.டி.பி. கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் கட்சி நலன்சார் வேலைத் திட்டங்களின் ஊடாக ஒன்றிணைக்கப்பட வேணடும்.

அவ்வாறு ஏற்படுகின்ற திரட்சி ஈழத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் மக்கள் நலச் செயற்பாடுளுக்கு உந்து சக்தியாக அமையும்.

புலம்பெயர் சக்தியொன்று எமக்கு பின்பலமாக இருக்கின்றது என்ற செய்தி, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புலத்தில் மக்கள் நலச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற எங்களுடைய தோழர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் புதுத் தெம்பை அளிக்கும்’ என்று தெரிவித்;தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106