யாழ்ப்பாணத்தில் கால்பதித்தது இந்தியாவின் Ather – புதிய மின்சார விற்பனை நிலையம் கோலாகலமாகத் திறப்பு!

Thursday, November 12th, 2026


…….
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான Ather Energy, தனது புதிய வாகன விற்பனை நிலையத்தை யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது.

யாழ்ப்பாணம், இலக்கம் 243, ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள இந்தப் புதிய விற்பனை நிலையம் கடந்த புதன்கிழமை (11.11.2026) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் பிரபல்யம் பெற்றுள்ள Ather நிறுவனத்தின் நவீன மின்சார இருசக்கர வாகனங்களை யாழ்ப்பாண மக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும்அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் Ather நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களை யாழ்ப்பாணத்திலேயே பார்வையிட்டு, கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளூர் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மின்சார வாகனங்களுக்கான சந்தை வாய்ப்புகள் விரிவடைந்து வரும் நிலையில், Ather நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தின் வருகை வடபகுதியின் வாகனச் சந்தையில் புதியதொரு மைல்கல்லாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106