பந்தை சேதப்படுத்திய விவகாரம் – உஸ்மான் கவாஜாவுக்கு டேவிட் வார்னர் ஆதரவு!
Tuesday, November 10th, 2026
2018 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய கிரிக்கெட்டையே உலுக்கிய பந்தை சேதப்படுத்திய சர்ச்சை தொடர்பில், உஸ்மான் கவாஜா வெளியிட்ட கருத்துக்களுக்கு முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
உஸ்மான் கவாஜா தனது Sabr என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் 100 சதவீதம் உண்மையானவை என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இடம்பெற்ற பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில், அப்போது அவுஸ்திரேலிய அணியின் உப தலைவராக இருந்த டேவிட் வார்னருக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன், எதிர்காலத்தில் அணித் தலைமைப் பொறுப்புகளை ஏற்கவும் அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக கருத்துத் தெரிவித்துள்ள வார்னர், தனது சிறுவயது நண்பரான உஸ்மான் கவாஜாவுக்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,
“உஸ்ஸி, உனக்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன்.
நீ செய்த அனைத்திற்கும் நன்றி” என வார்னர் குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சை தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வார்னரின் இந்தக் கருத்து கிரிக்கெட் உலகில் புதிய பேசுபொருளாகியுள்ளது.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106