தீர்க்கப்படாத கோரிக்கைகள் – அரச இரு முக்கிய துறைகளில் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டம்!
Monday, November 9th, 2026
……
தமது நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அரச துறையின் இரு முக்கிய தொழில் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்தனர்.
குறிப்பாக தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும் இதுவரை சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், நிலவும் மருத்துவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கான வரிச்சலுகை வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டமை, அதிகரிக்கப்பட்ட வரிச்சுமை மற்றும் மேலதிக நேரம், விடுமுறை கொடுப்பனவுகளில் மேற்கொள்ளப்பட்ட குறைப்புகள் ஆகியவை மருத்துவர்களின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளதாக GMOA சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது சுகாதார அமைச்சின் கீழ் 25,000க்கும் குறைவான மருத்துவர்களே சேவையில் உள்ளதாகவும், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை விஞ்ஞான ரீதியாக மீளாய்வு செய்யப்படவில்லை என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டமும், மறுபுறம் மருத்துவர்களின் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மக்களுக்கான அரச சேவைகள் முடக்கப்படுவதால் மக்கள் தமக்ஜான தேவைகளை நிறைவுசெய்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
இன்னிலையில் குறித்த இந்த பிரச்சினைகளுக்கு எந்தகைய வகையில் தீர்வு காண அரசு முயற்சிக்கும் என்பதிலேயே இந்த நெருக்கடியின் தீர்வும் அமையுமென போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106